Saturday, January 20, 2007

286. பெரியாருக்கு மேலும் சிலைகள் !

மார்கழி மாதத்தில் நான் பதிந்த குளிர்ச்சியான திருப்பாவை விளக்கப் பதிவுகளைத் தொடர்ந்து, சுஜாதாவை பொதுவில் வைத்து பலரும் கும்மியதைத் தொடர்ந்து, தைப்பொங்கல் கொண்டாடுதல் குறித்த காரசார வலைப்பதிவு விவாதங்களைத் தொடர்ந்து, பெரியார் சம்பந்தப்பட்ட சற்று சூடான புது விவகாரம் உங்கள் பார்வைக்கு :) கொஞ்ச நாள் வெளியில் இருந்து, மீண்டும் ஜோதியில் (சரவணபவன் அண்ணாச்சிக்கும் இந்த ஜோதிக்கும் தொடர்பு இல்லீங்கண்ணா!) ஐக்கியமாக முடிவெடுத்ததும் இப்பதிவுக்கு ஒரு காரணம் ;-) சரி, மேட்டருக்கு போகலாமா !

ஸ்ரீரங்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு அருகே, 128 பெரியார் சிலைகளை நிறுவ இருப்பதாக திராவிட கழகம் கூறியிருப்பதற்கு, தமிழக முதல்வரின் மறைமுக ஆதரவு இருப்பதாக அவுட்லுக் செய்தியொன்று கூறுகிறது. ஏற்கனவே, ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து அயோத்தியா மண்டபம் மற்றும் இன்னபிற இடங்களிலும் நடந்தேறிய வன்முறை நிகழ்விகளையும் வைத்துப் பார்க்கும்போது, இவ்வாறு நடந்தால் (மெனக்கெட்டு கோயில்களுக்கு அருகே பெரியார் சிலைகள் நிறுவ இருப்பதை மட்டுமே சுட்டுகிறேன்!) ஏற்படவிருக்கும் பிரச்சினைகளை நாடு தாங்குமா என்ற கேள்வி எழுகிறது ! பெரியார் உயிரோடு இருந்திருந்தால், நடப்பவற்றைக் கண்டு நிச்சம் அவரே வெறுத்துப் போயிருப்பார் !!!

ஒரு பேட்டியில், முதல்வரின் (அவரது பாணியிலான!) கிண்டலான பேச்சு வேறு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும், வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது, கோயில் அர்ச்சகர்களே சற்று தயக்கத்துடன் தான் அச்சிலைகளுக்கு உடை உடுத்த வேண்டியுள்ளது என்று பொருள்பட கூறி, முத்தாய்ப்பாக, ஸ்ரீரங்கத்து பெரியார் சிலைக்கு ஏன் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மதத்தை முன்னிறுத்தி மக்களிடையே பகைமை உணர்வை வளர்க்க முயற்சிப்பதைக் காரணமாகக் காட்டி, முதல்வர் மீது வழக்கு தொடரப் போவதாக சில இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

நன்றி: OUTLOOK

*** 286 ***

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

எப்போதும் போல், என் பின்னூட்டமே முதல் பின்னூட்டம், இப்பதிவுக்கு :)

ரவி said...

தமிழ்மணத்தில இருக்க நூத்துக்கணக்கான பதிவுகள்ல உங்களோட பதிவு எனக்கு வராது...எப்போதும் என்னோட ஆபீஸ்ல ஓப்பன் செய்து பார்க்க முடியாது...

While trying to retrieve the URL: http://balaji_ammu.blogspot.com/2007/01/286.html

The following error was encountered:

Invalid URL
Some aspect of the requested URL is incorrect. Possible problems:

Missing or incorrect access protocol (should be `http://'' or similar)
Missing hostname
Illegal double-escape in the URL-Path
Illegal character in hostname; underscores are not allowed

இந்த கொடுமையான ஒரு மெஸேஜை கொடுத்துவிடும்...சரி பெரியாரை பற்றி ஒரு மேட்டர் போட்டிருக்கீங்களே என்று ஒருவரிடம் சொல்லி மடலை பின்பற்றி பார்த்தேன்...இயல்பான நகைச்சுவை எழுத்தாளர் நீங்க....:))))

said...

வழக்கு எல்லாம் தேவையே இல்லை.

சத்துரு சம்ஹார யாகம் செய்து கலைஞரை காலி செய்யுங்கள்.

enRenRum-anbudan.BALA said...

அன்பின் ரவி,

//சரி பெரியாரை பற்றி ஒரு மேட்டர் போட்டிருக்கீங்களே என்று ஒருவரிடம் சொல்லி மடலை பின்பற்றி பார்த்தேன்
//
நன்றி !

//இயல்பான நகைச்சுவை எழுத்தாளர் நீங்க....:))))

//
என்னய வச்சு காமெடி கீமடி பண்ணலியே ;-)

enRenRum-anbudan.BALA said...

jaallyjumper,
//
சத்துரு சம்ஹார யாகம் செய்து கலைஞரை காலி செய்யுங்கள்.
//

அதை என்னை ஏன் செய்யச் சொல்கிறீர்கள் ????? வருகைக்கு நன்றி !

வல்லிசிம்ஹன் said...

பாலா
எவ்வளவு சிற்பிகளுக்கு வேலை கிடைக்கும்!! அதுதான் இந்த செய்தி சுட்டிக் காண்பிக்கிறது.

said...

இப்ப பெரியாருக்கு 128 சிலைகள் வைக்கலாமா, கூடாதா ? என்ன சொல்ல வருகிறீர்கள் ?

பினாத்தல் சுரேஷ் said...

//பெரியார் உயிரோடு இருந்திருந்தால், நடப்பவற்றைக் கண்டு நிச்சம் அவரே வெறுத்துப் போயிருப்பார் !!!//

ஆமாம்னுதான் நானும் நினைக்கிறேன்.

said...

//சத்துரு சம்ஹார யாகம் செய்து கலைஞரை காலி செய்யுங்கள்//

அதுக்கு பயந்து தானே மஞ்சத்துண்டு சாய்பாபாவின் அதிருத்ர யாஹத்துக்கு போகுது :)

Hariharan # 03985177737685368452 said...

தாய்க்கல(ழ)கம் 128 வெங்காய செலை வைக்கபோறேன்னு அக்கப்போர் இப்போ.

கண்ணகிசெலை வெவெகாரத்துல குஞ்சுக்கல(ழ)கம் கண்ணகிசெலை வைக்க ஆர்டர் குடுத்து செஞ்ச சிமெண்ட் கண்ணகி செலை சேலம் வாழப்பாடி பஸ்ரூட்ல பாசி படிஞ்சு பச்சைக்கலர்ல சீந்தப்படாமல் இருக்குறது நியூஸாக பேப்பர்ல பலதரம் வந்தபிறகும் "பலதாரக்" கொள்கையோடு மனைவி, துணைவின்னு லா பாயிண்ட்லேர்ந்து எஸ்கேப்பாகும் தலைவன்களின் இயக்கங்கள் ஆக்கமாக இயங்கியதாகத் தெரியவில்லையே!

சிலையான கண்ணகி ஒரு கற்புக்கரசி என்பதால் சீந்த நாதியில்லையா?

**** Edited **** குறிப்பாகக் குஞ்சுகளுக்கு மட்டுமே தெரியும் தன் ஆளுமையைக் காட்டிய பெல்லாரிமேன் பெரிய வெங்காயத்துக்கு 128 செலைகள் போதுமா?

**********************
Dear Hariharan,
I had to do edit your above comment a little. Hope you understand !
enRenRum anbudan
BALA
****************

said...

"கோயிலுக்கு உள்ளே இருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும், வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது,.."
நாவடக்கம் இல்லாத பேச்சு. ஹிந்து என்றால் திருடன் என்று கூறுபவர் அந்த மதத்தில் ஏன் இருக்க வேண்டும்?

முரளி மனோஹர்

enRenRum-anbudan.BALA said...

வல்லிசிம்மன்,
//எவ்வளவு சிற்பிகளுக்கு வேலை கிடைக்கும்!! அதுதான் இந்த செய்தி சுட்டிக் காண்பிக்கிறது.
//
:))) நன்றி !

அனானி,
//இப்ப பெரியாருக்கு 128 சிலைகள் வைக்கலாமா, கூடாதா ? என்ன சொல்ல வருகிறீர்கள் ?
//
கோயில்களுக்கு அருகே தேவையில்லை என்பது என் கருத்து !

சுரேஷ்,
வருகைக்கு நன்றி !

எ.அ.பாலா

said...

வந்தேறிகளின் திட்ட மிட்ட சதி. பெங்களூர் முஸ்லிம்களிடையே கலவரத்தை பரப்பி 22 பேருக்கு மேல் படுகாயம். 12 வயது சிறுவன் மரணம்.

சதாமை தூக்கிலிட்டதை தொடர்ந்து வந்தேறிகள் ஆரம்பித்து வைத்த கலவரத்தில் இரண்டு வாகனங்கள் எரிப்பு. இதன் மூலம் புஷ் மிரண்டு போய் இருப்பதாக அமெரிக்க உள்துறை அறிவிப்பு.


இவற்றிற்கெல்லாம் பார்பன ஆரிய வந்தேறிகளின் சதி என்று வலையுலக இஸ்லாமிய பதிவர்கள் கூறியுள்ளார்கள்


-- யவன வந்தேறி ( இஸ்லாமியன் )

enRenRum-anbudan.BALA said...

அனானி,
//
அதுக்கு பயந்து தானே மஞ்சத்துண்டு சாய்பாபாவின் அதிருத்ர யாஹத்துக்கு போகுது :)
//
அப்டியா சங்கதி ;-) நன்றி !

ஹரிஹரன்,
வருகைக்கு நன்றி, ரொம்ப சூடா இருக்கீங்க போல !!!

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

முரளி மனோகர்,
//நாவடக்கம் இல்லாத பேச்சு. ஹிந்து என்றால் திருடன் என்று கூறுபவர் அந்த மதத்தில் ஏன் இருக்க வேண்டும்?
//
வயது ஆக ஆக நாவடக்கமும் கூட வேண்டும், என்ன செய்வது ?

எ.அ.பாலா

said...

If they use statues for inciting violence that will be their nemesis.Veeramani knows this.
He will provoke but wont support
violence.The rest will be taken
care by Thanthai Periyar Dravida
Kazhagam and Puthia Jananayagam/
Puthiya Kalacharam group.They will
indulge in violence and justify that. So while they waste their time in prisions and courts, he and DK will be busy in collecting money in the name of Periyar.
'Secularists' will issue bland
statements condemning violence.

said...

நேற்று போட்ட பின்னூட்டம் சொதப்பிவிட்டதால் மறுபடியும்.
எனக்கென்னவோ இருக்கிற அவ்வளவு சிலைகளையும் பிடிங்கி மியூசியத்தில் வைத்துவிடலாம் என்று தோனுகிறது.
இதில் ஆகும் செலவுக்கு கிராமத்துக்கு ஒரு நூலகம் அல்லது கணினி என்று வைத்து உழைத்து முன்னேற வேண்டிய அவசியத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
யாரோ சொன்ன மாதிரி "சிலையெல்லாம் பறவைகள் கழிப்பிடமாக" த்தான் இருக்கிறது.

said...

Bala, this is also a type of worship, which Periyar himself opposed!
see my writings about periya silai at
http://sirichuvai.blogspot.com

oru kasthuri pulaal unbadhaal, kadavul nambikkai azhiyaadhu, adhey poal, endha nija kadavul nambikkai ullavanum pirarai avamadikkavao, nindhikkavo maattaan.

said...

Hi Bala,

http://sirichuvai.blogspot.com/2006/12/blog-post_25.html

sorry, I forgot the periyararticle link of mine in yesterday's feedback. You may add this too.
Thanks

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails